அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!
அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால், இதுவரை இந்த வைரஸை முற்றிலுமாக அழிப்பதற்கு எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலக அளவில், 5,905,415 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 362,024 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் தான்.
அமெரிக்காவை பொறுத்தவரையில், இதுவரை 1,768,461 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 103,330 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் நேற்று மட்டும் அமெரிக்காவில், இந்த வைரஸ் தாக்கத்தால், 1,223 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.