பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…
பஹல்காம் தாக்குதலை எதிர்த்து லண்டனில் போராடியவர்களை நோக்கி பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கழுத்தை அறுப்பது போன்று சைகை காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்றும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது என்றும் குற்றசாட்டுகளை முன்வைத்து, லண்டனில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் முன் வெளிநாடு வாழ் இந்தியார்கள் போராட்டம் நடத்தினர்.
சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது என்று, அந்நாட்டு அரசுக்கு எதிராகவும், இதற்கு இங்கிலாந்து அரசு பாகிஸ்தானுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பல்வேறு கோஷங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படை ஆலோசகர் கர்னல் தைமூர் ரஹத் போராட்டக்காரர்களை பார்த்து கழுத்தை அறுக்கும் சைகையை காட்டினார். மேலும் பாகிஸ்தான் காஷ்மீர் மக்களுக்கு துணையாக நிற்கும் என்ற பதாகையும் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. சர்ச்சைக்குரிய சைகை கட்டிய பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போராட்டக்காரர்கள் ஊடகங்களில் தெரிவிக்கையில், “இது வெறும் சைகை மட்டுமல்ல. இது போராட்டக்காரர்களை மேலும் ஆத்திரமூட்டும் செயல் ஆகும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கண்டிக்க மறுக்கிறது. அப்படியென்றால், அவர்களும் பயங்கரவாதத்திற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்றே அர்த்தம்.” என்று கூறினார்.
மேலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் உரத்தசத்தத்துடன் கொண்டாட்ட இசையை இசைத்ததாகவும் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் அவமானத்தை சேர்க்கும் தொனியில் செய்யப்பட்ட அவமானகரமான செயல் என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு TRF எனும் உள்ளூர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பானது பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுவாகும். இதன் அடிப்படையிலேயே பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் உள்ளது என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. லஷ்கர் இ தொய்பா அமைப்பு எங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பில்லை என முன்னரே விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
A senior staff of Pakistan High Commission, London was seen threatening to slit throat of peaceful protesters.
The Terror mindset of Pakistan is yet Again exposed.#पहलगाम_आतंकी_हमला #पहलगाम_हिंदू_नरसंहार pic.twitter.com/qZqR1rysCy
— Cyber Huntss (@Cyber_Huntss) April 26, 2025