இஸ்ரேல் போர்: சர்ச்சை கருத்து தெரிவித்த மியா கலீஃபா! பறிபோனது முன்னணி நிறுவனங்களின் ஒப்பந்தம்!

mia khalifa isrel war

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இது தொடர்பாக நடிகை மியா கலிஃபா சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டதால் முன்னணி நிறுவனங்களின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஓய்ந்தபாடில்லை, இந்த கொடூர தாக்குதலில் இரு தரப்பிலும் 1,600க்கும் அதிகமானோர் உயிரிழ்ந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரு தரப்பினருக்கும் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில், முந்தைய அடல்ட் பட நடிகை மியா கலிஃபா தனது X தள பக்கத்தில், நீங்கள் நிலைமையைப் பார்த்து, பாலஸ்தீனியர்களின் பக்கம் இல்லை என்றால், நீங்கள் நிறவெறியில் தவறாக இருக்கிறீர்கள், சரித்திரம் உங்களுக்கு காண்பிக்கும்.

பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் தயவு செய்து யாரேனும் படம் பிடிக்கவும் சொல்ல முடியுமா என்று பாலஸ்தீனியர்க ஆதரவு தெரிவித்து பதிவிட்டு இருந்தார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மியா கலிஃபா மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் பிறந்தார், பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். ஆபாச காணொளிகளில் நடித்த மியா கலிஃபாவுக்கு முன்னணி பிராண்ட் நிறுவனங்கள் இவருக்கு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு அளிக்க தொடங்கியது. பின்னர், சிலபல காரணங்களால் ஆபாச காணொளிகளில் நடிப்பதில் இருந்து விலகினார்.

தற்போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்ட நிலையில், அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான பிளேபாய் நிறுவனம் மியா கலிஃபாவுடனான ஒப்பந்தத்தை முறித்து கொண்டது. இது தொடர்பாக அந்நிறுவனம் மின் அஞ்சல் அனுப்பியுள்ளது. இது குறித்து விளம்பர தொடர்பாளர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து கொண்டது. இதனை தொடர்ந்து, மியா கலீஃபா, கனடாவின் சிரியஸ் எக்ஸ்.எம். என்ற நிறுவனம் நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்சிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்