தொடரும் இஸ்ரேலின் குண்டு வீச்சு ..! ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றும் ஒரு தளபதி உயிரிழப்பு!
லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சரமாரியாக குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 550-ஐ கடந்துள்ளது.
லெபனான் : இஸ்ரேல் நேற்று லெபனான் மீது நடத்திய அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த தளபதி இப்ராகிம் முகமது கோபிசி தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது, அதனை ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதி செய்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு லெபனான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த முக்கிய தளபதியான இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். அவரை தொடர்ந்து அடுத்ததாக ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்த முக்கிய தளபதியான இப்ராஹிம் முகமது கொல்லப்பட்டுள்ளார்.
இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டதற்கு பதில் தாக்குதலாக ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது 150-க்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் இஸ்ரேல் இதற்கு பதிலடியாக லெபனான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமான வான்வழி தாக்குதலை மேற்கொண்டனர். இதில்
இதில் 300-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தது. இந்த தாக்குதலில் 550-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அதில் 50 பேர் சிறுவர்/சிறுமிகள் உட்பட 90 பேர் பெண்கள் அடங்குவார்கள்.
மேலும்,1,835- க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலில் தங்களை தற்காத்துக் கொள்ள லெபனானில் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வெறு இடம் நோக்கி பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.