பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மட்டுமே 1,600 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான UNICEF இயக்குநர் அறிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு அக்.7, சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் மீது தற்போது வரை இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான போரால் இருதரப்பில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து இன்று 15வது நாள் நீடித்து வரும் நிலையில், காசாவில் வன்முறையால் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்த 493,000 பெண்கள் மற்றும் சிறுமிகளில், 900 புதிய விதவைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல்கள் காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர், உணவு, மின்சாரம் மற்றும் மருத்துவப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. ஏனெனில் இஸ்ரேல் தங்கள் தாக்குதல்களை இடைவிடாமல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், காசாவில் இரண்டு வார குண்டுவெடிப்புகளில் மட்டுமே 1,600க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது என மத்திய கிழக்கு நாடுகளுக்கான UNICEF இயக்குநர் தெரிவித்துள்ளார். 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
குழந்தைகளைக் கொல்வது மற்றும் ஊனப்படுத்துவது, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் மனிதாபிமான அணுகலை மறுப்பது ஆகியவை கடுமையான குழந்தை உரிமை மீறல்களாகும். மனிதநேயம் மேலோங்க வேண்டும் எனவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, இந்த தாக்குதலால் காஸாவில், குறைந்தது 4,137 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 12,065 மக்கள் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், காஸாவின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றுள்ளனர்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…