ஆபாச பட நடிகையுடன் தொடர்பு..! குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் டிரம்ப்..! கைது செய்யப்படுவாரா.?
கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டொனால்ட் டிரம்ப் பெற்றார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக நியூயார்க் கிராண்ட் ஜூரி குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிகழ்வால் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆகிறார்.
ஆபாச படநடிகையுடன் தொடர்பு :
டொனால்ட் டிரம்ப், ஆபாச படநடிகையான 44 வயதான ஸ்ட்ராமி டேனியல்ஸ் என்பருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த தொடர்பை மறைப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்ட்ராமி டேனியல்ஸுக்கு கட்சியின் நிதியில் இருந்து $130,000 டாலர் (இந்தியா மதிப்பில் ரூ.1,06,84,375 கோடி) கொடுத்துள்ளார். இதையடுத்து நியூயார்க் கிராண்ட் ஜூரி, டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றம் சாட்டியது.
விசாரணைக்கு வர வேண்டும் :
டொனால்ட் டிரம்ப் மீதான இந்த குற்ற வழக்கு மன்ஹாட்டான் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணையில் உள்ள நிலையில் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக்கின் அலுவலகம், ட்ரம்பின் வழக்கறிஞர்களைத் தொடர்புகொண்டு, அவர் மீதான விசாரணைக்காக மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் அவர் சரணடையவும், விசாரணை தேதி குறித்து தெரிவிக்கபடும் என்றும் கூறியுள்ளது.
— Alvin Bragg (@ManhattanDA) March 30, 2023
கைது செய்யப்படுவாரா.?
அமெரிக்காவில் கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு அவர்களின் புகைப்படம் மற்றும் கை ரேகை போன்றவை பதிவு செய்யப்படும். அந்தவகையில் முன்னாள் அமெரிக்க அதிபரான டிரம்ப் கைது செய்யப்பட்டு, அவரது புகைப்படம் மற்றும் கை ரேகை போன்றவை பதிவு செய்யப்படுமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் :
ஜனாதிபதித் தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னோடியாகக் கருதப்படும் டிரம்பிற்கு இந்த குற்றச்சாட்டுகள் பின்னடைவை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அமெரிக்க கேபிடல் கலவரம் முதல் இரகசிய கோப்புகள் காணாமல் போனது வரை இரண்டு குற்றச்சாட்டுக்கள் டொனால்ட் டிரம்ப் மீது வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.