அமெரிக்காவில் இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்!

israel vs Palestine

தொடர்ந்து மூன்று நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் மாறிமாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ள ஹமாஸ் அமைப்பினர் சிலரை பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் வீடியோக்களும், ஏவுகணை தாக்கும் வீடியோக்களும் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

இப்படி நெஞ்சை உலுக்கும் சம்பவம் இந்த போர் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்று பிற நாடுகளின் ராணுவம் உதவிகள் எங்களுக்கு தேவையில்லை என்றும், இந்த போரை நாங்களே பார்த்துக்கொள்வோம் என இஸ்ரேல் தூதர் அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், நொடிக்கு நொடி பதற்றமான சூழ்நிலை அங்கு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவில் இஸ்ரேல், பாலஸ்தீன் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நடுரோட்டில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாங்கள் வைத்திருக்கும் கொடியை கொண்டு தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு பக்கம், இஸ்ரேலில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஈரான், கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேசமயம், இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரவை தெரிவித்துள்ளன. இந்தியாவும் தனது ஆதரவை தெரிவித்து ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்