இங்கிலாந்தில் 2022 வெப்பமான ஆண்டாக அமைந்துள்ளது
இங்கிலாந்தின் ஆண்டு சராசரி வெப்பநிலை 2022 இல் முதல் முறையாக 10C க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது, 2022 ஆம் ஆண்டு நாட்டின் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் சராசரி வெப்பநிலை 10.03C ஆக இருந்தது, இது 2014 வரை இருந்த அதிகபட்ச வெப்பநிலையான 9.88C தாண்டியுள்ளது.
இயற்கையான காலநிலையின் கீழ் 500 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெப்பமான சூழல் மாற்றமடையும் , ஆனால் இப்போது தற்போதைய காலநிலையில் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சாத்தியமாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.