சூடான் தலைநகரில் நடந்த கடும் மோதல்.! வீடுகள் சேதமடைந்த கோர காட்சிகள்…
சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவக் குழுவிற்கும் இடையிலான மோதல்களால், உயிரிழப்புகள் மற்றும் மக்கள் அதிகமாக வசிக்கும் பொது இடங்களுக்கு சேதம் ஏற்பட்டது.
சூடானின் தலைநகரின் வடக்கில் எடுக்கப்பட்ட சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சூடான் இராணுவத்திற்கும், விரைவு ஆதரவுப் படைகள் எனப்படும் துணை இராணுவக் குழுவிற்கும் இடையிலான போரினால் ஏற்பட்ட சேதத்தை தெளிவாக காட்டுகிறது.
சூடானின் தலைநகரான கார்டூம் நகரின் வடக்கே அமைந்துள்ள பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது, அங்கு ஏற்பட்ட வான்வழி தாக்குதலால் பல வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட பல முக்கிய சேவைகள் இடிந்து விழுந்துள்ளது.
بحري ???? pic.twitter.com/jkqh3jlme9
— حسنه الگنزي (@AllanziHusna) April 24, 2023
இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
388 பேர் மீட்பு:
இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும் அறிக்கையில், நேற்று இரவு, இரண்டு இராணுவ விமானங்களில் சுழற்சி முறையில் இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் வெளியேற்றப்பட்டனர்.