இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி, உலகெங்கும் உள்ள பில்லியன் கணக்கான மக்களால் கிறிஸ்துமஸ் தினமாக, மத மற்றும் கலாச்சாரம் தாண்டி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் தினம் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது.
குழந்தை இயேசு பிறந்த இடம்: இயேசு கிறிஸ்து, இஸ்ரேலில் உள்ள பெத்லகேமில் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஜெருசலேமுக்கு தெற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் பெத்லகேம் அமைந்துள்ளது. இயேசுவின் பெற்றோர்களான ஜோசப் மற்றும் மேரி இந்நகரத்திற்கு முதன்முதலாக வந்தபோது, அவர்களுக்கு தங்குவதற்கு சத்திரத்தில் இடம் இல்லாததால் தொழுவத்தில் தங்க இடம் வழங்கப்பட்டது.
இந்த தொழுவத்தில் தான் குழந்தை இயேசு பிறந்தார். பெத்லகேமில் உள்ள நேட்டிவிட்டி தேவாலயம், 2 ஆம் நூற்றாண்டிலிருந்து கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இயேசு பிறந்த இடமாக கருதப்படுகிறது. மேலும் இங்கு, பாரம்பரியமாக இயேசு பிறந்த இடம் என்று நம்பப்படும் ஒரு குறிப்பிட்ட குகை உள்ளது.
இந்த தேவாலயம் கி.பி 339 இல் கட்டி முடிக்கப்பட்டாலும் 6ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு தேவாலயம் கட்டுமானத்தில் சில மாற்றங்களுடன் புதுப்பிக்கப்பட்டது. இதுதான் இன்றுவரை மக்கள் தினமும் சென்றுவரும் பழமையான கிறிஸ்தவ தேவாலயமாகும். மேலும் இயேசு பிறந்த, இந்த இடம் தான் கிறிஸ்தவத்தின் தொடக்கமாக, கிறிஸ்தவ புனித இடங்களில் ஒன்றாகும்.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கிரிகோரியன் நாட்காட்டியின்படி டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இருப்பினும், கிழக்கு பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் ஒரு பகுதி மக்கள், பழைய ஜூலியன் நாட்காட்டியின்படி கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். இது கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஜனவரி 7ஆம் தேதியைக் குறிக்கிறது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…