Chopsticks [Imagesource : NDTV]
வியட்நாமை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சுமார் ஐந்து மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர், டோங் ஹோயின் கியூபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
பின் மருத்துவர்கள் அவருக்கு சி.டி ஸ்கேன் செய்ததில், அந்த நபர் டென்ஷன் நியூமோசெபாலஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த பரிசோதனைகள் மனிதனின் அறிகுறிகளின் அசாதாரண நிலையை வெளிப்படுத்தியது.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒரு ஜோடி சாப்ஸ்டிக்ஸ் அவரது மூக்கு வழியாக நுழைந்து மூளையை அடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு வியட்நாமில் குடித்துக்கொண்டிருந்தபோது சண்டையில் ஈடுபட்டதாகவும், சண்டையின் போது சாப்ஸ்டிக்ஸ் குச்சியால் மூக்கில் குத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மருத்துவர்கள் மூக்கு வழியாக மேற்கொள்ளப்பட்ட எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம், மருத்துவர்கள் வெற்றிகரமாக சாப்ஸ்டிக்குகளை அகற்றினர். அதனை தொடர்ந்து, மூளை மற்றும் முதுகுத் தண்டு திசுக்களில் உள்ள தமனி மற்றும் நரம்புக்கு இடையே உள்ள ஃபிஸ்துலாவை மூட மைக்ரோ சர்ஜரி செய்துள்ளனர். தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…