மனிதனின் மூலையில் சிக்கியிருந்த சாப்ஸ்டிக் குச்சிகள்..! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..!

Chopsticks

வியட்நாமை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சுமார் ஐந்து மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர், டோங் ஹோயின் கியூபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

பின் மருத்துவர்கள் அவருக்கு சி.டி ஸ்கேன் செய்ததில், அந்த நபர் டென்ஷன் நியூமோசெபாலஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த பரிசோதனைகள் மனிதனின் அறிகுறிகளின் அசாதாரண நிலையை  வெளிப்படுத்தியது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே ஆளுநர் முயற்சி.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில்  ஒரு ஜோடி சாப்ஸ்டிக்ஸ் அவரது மூக்கு வழியாக நுழைந்து மூளையை அடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு வியட்நாமில் குடித்துக்கொண்டிருந்தபோது சண்டையில் ஈடுபட்டதாகவும், சண்டையின் போது  சாப்ஸ்டிக்ஸ் குச்சியால் மூக்கில் குத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவர்கள் மூக்கு வழியாக மேற்கொள்ளப்பட்ட எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம், மருத்துவர்கள் வெற்றிகரமாக சாப்ஸ்டிக்குகளை அகற்றினர். அதனை தொடர்ந்து, மூளை மற்றும் முதுகுத் தண்டு திசுக்களில் உள்ள தமனி மற்றும் நரம்புக்கு இடையே உள்ள   ஃபிஸ்துலாவை மூட மைக்ரோ சர்ஜரி செய்துள்ளனர். தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்