மீண்டும் மீண்டுமா… ‘கொரோனா போலவே புதிய வைரஸ் தொற்று’ – சீனா விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்.!

சீனாவில் உள்ள நிபுணர்கள் குழு ஒன்று வௌவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளது.

Covid HKU5

பெய்ஜிங் : கொரோனா காலத்தை யாரு தான் மறக்க முடியும்? அந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா அச்சத்தை பார்த்து எத்தனை பேர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். கொரோனா பாதிப்பு இப்பொழுது இல்லை என்றாலும், அவ்வபோது கொரோனா தொற்று போலவே சில வைரஸ் தொற்று பரவுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம்.

அந்த வகையில், மனிதர்களிடையே பரவும் புதிய வகை கொரோனா வைரஸை தற்போது கண்டறிந்துள்ளதாக சீன வைரஸ் நிபுணர் Shi Zhengli அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய வைரஸோடு பல வகைகளில் ஒற்றுமை கொண்டுள்ள இந்த வைரஸுக்கு HKU5 என பெயரிடப்பட்டுள்ளது.

பல வகைகளில் நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸ்கள் உள்ளன. அவற்றில், SARS, SARS-CoV-2, MERS மற்றும் இன்னும் சில உள்ளிட்ட ஒரு சில மட்டுமே மனிதர்களைப் பாதிக்கின்றன. சமீபத்திய ஆய்வின் மூலம், ஷி ஜெங்லியின் நிபுணர் குழு, மனிதர்களைப் பாதிக்கக்கூடிய மற்றொரு கொரோனா வைரஸைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, சவுத் சைனா மார்னிங் சவுத் போஸ்ட் அறிக்கையின்படி, இந்த வைரஸ் முன்பு ஹாங்காங்கில் உள்ள ஜப்பானிய பைபிஸ்ட்ரெல் வௌவால்களில் கண்டறியப்பட்டது. இது மார்பெகோவைரஸ் துணை இனத்திலிருந்து வருகிறது. இதில் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS) ஏற்படுத்தும் வைரஸும் அடங்கும்.

இந்த வைரஸ், COVID-19 வைரஸால் பயன்படுத்தப்படும் ACE2 ஏற்பியுடன் பிணைக்கிறது. இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது COVID-19 போல ஆபத்தானது அல்ல என்றாலும், தொற்றுநோய்க்கான தயார்நிலைக்காக இது கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் வளர்ந்து வரும் நோய்க்கிருமிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்த புதிய வைரஸ், “நேரடி பரவுதல் மூலமாகவோ அல்லது இடைநிலை ஹோஸ்ட்களால் மூலமாகவோ, மனிதர்களுக்கு பரவும் அதிக ஆபத்தை கொண்டுள்ளது என்று கூறியுள்ளனர். இந்த ஆராய்ச்சியை ஷியின் வுஹான் வைராலஜி நிறுவனம் (WIV), குவாங்சோ ஆய்வகம் மற்றும் குவாங்சோ அறிவியல் அகாடமி இணைந்து நடத்தியுள்ளது.

அச்சுறுத்தல்கள் உண்டா?

(Shi Zhengli ) ஷி ஜெங்லியின் குழு, HKU5-CoV-2 ஆனது தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைக் கண்டறிந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்த வைரஸை மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இருப்பினும், அதன் செயல்திறன் கொரோனா வைரஸை விட மிகக் குறைவு என்றும், HKU5-CoV-2 மனித மக்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படக்கூடாது என்றும் குழு தெளிவுபடுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்