மூன்றாவது குழந்தையை பெற்றெடுப்பவர்களுக்கு 11.50 லட்சம் ரொக்கம் போனஸ் மற்றும் ஒரு வருடம் விடுமுறை வழங்கும் சீன நிறுவனம்.
சீனாவில் ஒரு குழந்தை கொள்கைக்கு 2016இல் அதிகாரபூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது சீன அரசாங்கம் மக்களை அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுமாறு ஊக்குவிக்கிறது. சமீபத்தில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் ஊழியர்களுக்கு ஒரு சீன நிறுவனம் ஊக்கத் தொகை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது குழந்தையை பெற்றெடுப்பவர்களுக்கு 11.50 லட்சம் ரொக்கம் போனசாக வழங்கப்படும் என்றும், நிறுவனத்தை சேர்ந்த பெண் ஊழியர்களுக்கு ஒரு வருட விடுமுறையும், ஆண் ஊழியர்களுக்கு ஒன்பது மாத விடுமுறையும் வழங்குவதாக கூறப்படுகிறது. சீன மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு எதிர்கொள்ள தொடங்கிய நிலையில் முதியோர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.
ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய காலகட்டங்களில் சீனாவில் கருக்கலைப்புகளும் அதிகரித்தது. இதனை அடுத்து சீன அரசு ஒரு குழந்தை கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சீனா தனது ஒரு குழந்தை கொள்கையை ஜனவரி 1-ஆம் தேதி 2016 அன்று அதிகாரபூர்வமாக தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…