கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…
சீன கார் நிறுவனமான BYD நிறுவனம் 6 மீட்டர் தூரம் வரையில் பறக்கும் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல் அதற்குள் கார் செல்வதால் தடுமாறும் நிலையோ, அதிக சஸ்பென்ஷன் திறன் இருந்தாலும் அந்த மேடு பள்ள தடைகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு, சீனா கார் தயாரிப்பு நிறுவனமான BYD நிறுவனம் புதிய கார் ஒன்றை தயாரித்துள்ளது. Yangwang U9 எனும் பெயரிடப்பட்ட இந்த மாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், காரில் சென்று கொண்டிருக்கும் பொது இடையில் பள்ளம் இருந்தால் இதில் உள்ள அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காரை 6 மீட்டர் தூரம் முன்னோக்கி (உயரத்தில் அல்ல) பறக்க வைக்க முடியும் என BYD நிறுவனம் கூறியுள்ளது.
இந்த பறக்கும் தொழில்நுட்பத்திற்காக BYD நிறுவனம் Yangwang U9 காரில் அதிநவீன சஸ்பென்சன் திறனை உபயோகப்படுத்தியுள்ளது. இந்த சூப்பர் சஸ்பென்சன் திறன் கொண்டு கார் பறக்கும் தன்மையில் தடுமாறும் நிலை ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இந்த பறக்கும் கார் பற்றிய வீடீயோவை இணையத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
BYD has released a new video of its Yangwang U9 supercar jumping 6 meters forward over a pothole using its “jumping suspension” feature. pic.twitter.com/3Yq8IRomVo
— Sawyer Merritt (@SawyerMerritt) January 7, 2025
Yangwang U9-ன் சஸ்பென்ஷன் சிஸ்டம் செயல்திறனை சரியான நேரத்தில் நடைமுறைபடுத்தும் வகையில், இவை இரண்டையும் மேம்படுத்தும் தொழில்நுட்பத்தின் கீழ், வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி, கார் பறக்கும் போது ஏற்படும் அதிர்வுகளை தாங்கும்படியும், தடைகளைத் தாண்டிச் செல்லும்படியும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. இந்த வீடியோ முதலில் வாகனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பதிவிடப்பட்டது. இந்த வீடியோ இது இந்திய நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்தது.