இலங்கை பள்ளிகளுக்கு இலவச சீருடை துணியை வழங்கியது சீனா!

இலங்கையில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சீன அரசு பாடசாலை சீருடையை இலவசமாக வழங்கியுள்ளது.

China to SL

சீனா : இலங்கையில் உள்ள பள்ளிகளுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளை (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக  வழங்கப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்று (10) கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து சீனா தூதர்  இலங்கை பிரதமரிடம் சீருடைகளை வழங்கினார்.

சீனா வழங்கியுள்ள அந்த சீருடை துணிகள் மூன்று தொகுதிகளாக இலங்கையை வந்தடையவுள்ளது. ஏற்கனவே, முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 25-ஆம் தேதி மூன்றாவது தொகுதியாகவும் சீருடை இலங்கைக்கு வந்துவிடும் எனவும் இலங்கை பிரதமர் தெரிவித்தார்.

சீனா வழங்கிய இந்த உதவி குறித்து இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய பேசுகையில் ” 2025ஆம் ஆண்டில் 46.40 லட்சம் மாணவர்களுக்கு சீருடை தேவை என்கிற நிலையில் ஏற்பட்டுள்ளது. தேவையான அனைத்து சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ” எனவும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்