சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

Restaurant fire kills

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District) ஒரு உணவகமான சுனியாங் உணவகத்தில் (Chuniang Restaurant) மதியம் 12:25 மணிக்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். தீ மிக வேகமாகப் பரவியதால், உணவகத்தில் இருந்தவர்களால் தப்பிக்க முடியவில்லை. மேலும், தீ பிடித்த இந்த உணவகம் ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்தது என்பதால் இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக அனுப்பப்பட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், தீ விபத்திற்கு என்ன காரணம் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாவது ” தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான் இந்த நேரத்தில் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். விபத்திற்கு என்ன காரணம் என்று விரைவாகக் கண்டறிய வேண்டும். இதற்கு பொறுப்பானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடக்காமல் தடுக்க, சீனாவில் பாதுகாப்பு விதிகளை இன்னும் மேம்படுத்தப்படும்” எனவும் ஜி ஜின்பிங்  கூறியுள்ளார். இறந்தவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்