வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த ‘Bath House’ ஒரு அறிய வகை சேவையை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு குளியல் இல்லம் (Bath House) ஒன்றில் வாடகை அப்பா என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. ‘Rent a Dad’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை மூலம், தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை அப்பாக்கள் செய்வார்கள்.
அதாவது, தாய் குளிக்கும் வரை இந்த குழந்தைகளை வாடகை தந்தைகள் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அந்த குழந்தைகளுக்கு உடை மாற்றி விடுவது என அனைத்தையும் கவனித்து கொள்கிறார்கள். குறிப்பாக, இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சேவைக்கு பலர் வரவேற்ப்பு அளித்துள்ளனர்.
பெண்களுக்கு மட்டும் உள்ள பகுதிகளில், சிறுவர்கள் நுழைவதை தடுக்க இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் தன் மகனுடன் இங்கு வந்தால், தன் மகனை வாடகை தந்தை என அழைக்கப்படும் நபரிடம் ஒப்படைத்து, நீச்சல் குளத்தில் சுதந்திரமாக நீந்தி மகிழலாம். வாடகைத் தந்தை அதுவரை உங்கள் மகனைக் கவனித்து, ஆண்கள் குளிப்பதற்கு அழைத்துச் செல்வார் என்று அந்த குளியல் இல்லம் (Bath House) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கு ஆண் மற்றும் பெண் சிரவர்களுக்கென தனித்தனி அறைகளையும், உணவு, பானங்கள், மசாஜ்கள், பொழுதுபோக்கு மற்றும் பிற வசதிகளை அனுபவிக்கக்கூடிய யுனிசெக்ஸ் லவுஞ்ச் பகுதியையும் வழங்குகின்றதாம்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…