சீனாவுக்கு வாங்க வந்து தடுப்பூசி போட்டு போங்க…தைவானுக்கு சீனா அழைப்பு !

Default Image

சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களுக்கு சீனா அழைப்பு.

உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டு முதல் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது.

இதையடுத்து சீனா அரசாங்கம் வெள்ளிக்கிழமை அன்று சீன தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இதனுடன் தைவான் தடைகளை நீக்கி அதன் மக்களை “மிகவும் பயனுள்ள” சீன தடுப்பூசிகளை பெற அனுமதிக்குமாறு அந்நாட்டுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

தைவான் உள்நாட்டு நோய்தொற்று அதிகரிப்பில் கடுமையாக போராடி வருகிறது, இதையடுத்த சீனா ஜனநாயக ரீதியாக தைவான் தீவுக்கு தடுப்பூசிகளை அனுப்ப பலமுறை முன்வந்துள்ளது. ஆனால் சீன தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு அவற்றைப் பயன்படுத்தவும் அந்நாடு அனுமதிக்கவில்லை.

சீனாவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தைவான் கண்டிப்பாக இணங்கினால், கொரோனாக்கு எதிராக தடுப்பூசி போட தைவான் மக்கள் சீனாவுக்கு வரலாம் என்று சீனாவின் தைவான் விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் தைவானின் 23.5 மில்லியன் மக்களில் 3% மட்டுமே குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் சலுகை பல தைவானியர்களை கவர்ந்திழுக்க வாய்ப்பில்லை என்றும் கடந்த மாதம் தைபேயின் தேசிய செங்கி பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் சீன தடுப்பூசி பெற தயாராக இருக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது சிலருக்கு கவர்ச்சிகரமானதாக இருக்கலாம், ஆனால் பலரால் செலவுகளைச் சமாளிக்க முடியாது என்பதுதான் பிரச்சினை என்று ஓரு தைவான் அதிகாரி கூறியுள்ளார், தைவானுக்கும் சீனாவிற்கும் இடையில் பயணம் செய்யத் தேவையான தனிமைப்படுத்தலின் வாரங்கள் மற்றும் செலவுகளை அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்