சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள உணவகம் ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொழுதுபோக்கு மற்றும் உணவகங்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிராகன் படகு திருவிழா விடுமுறைக்கு முன்னதாக, நேற்று மாலையில், நிங்சியா ஹுய் தன்னாட்சி பிராந்தியத்தில், தலைநகர் யின்சுவானில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பாதுகாப்பு முயற்சிகள் இருந்தபோதிலும், எரிவாயு மற்றும் இரசாயன வெடிப்புகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் துரதிருஷ்டவசமாக சீனாவில் அவ்வப்போது நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டில், வடக்கு துறைமுக நகரமான தியான்ஜினில் நடந்த ஒரு சோகமான தொடர் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…