சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு.!
அமெரிக்காவின் சிலி, மத்திய சிலி ஆகிய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தீ பரவலை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடன் நீர் எடுத்து வரப்பட்டு, நீர் ஊற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,100 வீடுகளுக்கு மேல் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 43,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் தற்போது 92 இடத்தில தீவிபத்துகள் எரிந்து வரும் நிலையில், ராணுவம் மேலும் துருப்புக்களை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தற்போது, இந்த தீ விபத்தில் சிக்கி உயர்ந்தோரின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. மேலும், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தீயை சமாளிக்க பதில் குழுக்களுக்கு உதவ பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
கென்ய தலைநகரில் எரிவாயு வெடித்து விபத்து…2 பேர் பலி, 200 பேர் காயம்.!
மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான முகாம்களுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்படும் வருகிறார்கள். கடற்கரை நகரங்களை இந்த காட்டு தீயால் சாம்பல் புகைனால் அடர்ந்த மூடுபனி போல மூடி காணப்படுகிறது.