செஃப் ஆக மாறிய பில் கேட்ஸ்; இந்திய உணவான ரொட்டி செய்த வீடியோ!
மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் ரொட்டி செய்து நெய்யுடன் சாப்பிடும் வீடீயோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
உலகின் மிகப்பெரும் பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், இந்திய உணவான ரொட்டி தயாரித்து சாப்பிடும் வீடீயோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பில் கேட்சும் அவரது செஃப் ஈட்டன் பெர்நாத்துடன் சேர்ந்து ரொட்டியை தயாரித்துள்ளனர். ஈட்டன் சமீபத்தில் இந்தியாவின் பீகார்-க்கு சென்று திரும்பியுள்ளார்.
ஈட்டன் பெர்நாத், அவரது இந்திய பயணத்தில் ‘திதி கி ரசோய்’ சமூக கேன்டீன்களில் இருந்து சில பெண்களிடம் இந்த ரொட்டி செய்யும் முறையைக் கற்றுக்கொண்டதாகவும் பில் கேட்ஸ் தெரிவித்தார். அந்த வீடியோவில் இருவரும் ஒரு கிண்ணத்தில் ரொட்டி செய்வதற்கான மாவை கலக்கி, பின்பு அதனை தேய்த்து ரொட்டி செய்து நெய்யை தடவி இருவரும் சாப்பிடுகின்றனர்.
View this post on Instagram