சாட்GPT ஆபத்தானது, நான் 45 நாட்களாக தூங்கவில்லை- கோர்செரா சிஇஓ
சாட்GPT ஆரம்பமானது மற்றும் ஆபத்தானது, நான் 45 நாட்களாக தூங்கவில்லை என கோர்ஸ்ராவின் சிஇஓ கூறியுள்ளார்.
உலகெங்கும் தற்போது மக்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் சாட்GPT செயற்கை நுண்ணறிவு(AI) குறித்து, அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் கோச்சிங் தளமான கோர்ஸ்ரா(Coursera) வின் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) ஜெஃப் மாகியான் கால்டா, சாட்GPTயால் தான் 45 நாட்களாக இரவில் விழித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, நான் சாட்GPT(AI) பயன்படுத்தி வருகிறேன், இதன் மூலம் புதிய விஷயங்களை உருவாக்க முடியும். இது மிகவும் அசாதாரணமானது, ஆனால் ஆரம்பநிலையில் தான் உள்ளது, மேலும் இது ஆபத்தானது. இதன் மூலம் அனைத்தையும் சீர்குலைக்கமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சாட்GPTயை, கோர்ஸ்ரா உடன் ஒருங்கிணைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.