சாதி பாகுபாடு தடை மசோதா… கலிஃபோர்னியாவில் மசோதா நிறைவேற்றம்.!
கலிபோர்னியாவின் அமைச்சரவையில் சாதி பாகுபாட்டை தடை செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா அமைச்சரவையில்(செனட்) 34-1 என்ற வாக்குகள் ஆதரவுடன், சாதி சார்பு மற்றும் பாகுபாடு தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி மக்களுக்கு சாதி பாகுபாடு பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண இந்த சட்டம் வழிவகுக்கும்.
ஜனநாயகக் கட்சியின் மாநில செனட்டர் ஆயிஷா வஹாப், இந்த சட்டத்தை கடந்த மார்ச் மாதம் அமைச்சரவையில் முன்மொழிந்திருந்தார். ஒருபடியாக கலிபோர்னியா மாநில செனட் இந்த சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை தடை செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றியது.
அமெரிக்காவில் சியாட்டிலில் முதன்முறையாக சாதிகளுக்கு பாதுகாப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்களை இயற்றிய முதல் நகரமாக இருந்தது. மேலும் இதனை தொடர்ந்து பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இதேபோன்ற சாதிய பாகுபாடு நடவடிக்கைகளை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.