சரக்கு கப்பல் மோதி பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து.! வைக்கும் வீடியோ….

Bridge Collapse

America : அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்துகுள்ளானது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பல் மோதியதில் சுமார் 2.6 கி.மீ நீளம் கொண்ட பால்டிமோர் பாலம் விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் நீரில் மூழ்கியதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள்  மற்றும் உயிர்ச்சேதம்  குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லை.

பாலம் இடிந்து விழுந்ததால் அனைத்து அங்கு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக மேரிலாந்து போக்குவரத்து ஆணையம் (எம்டிஏ) தெரிவித்துள்ளது. பால்டிமோர் துறைமுகத்திற்கு இது மிக முக்கியமான பாலமாக கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்