அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்.. 10 பேர் பலி!
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கார் ஒன்று கூட்டத்தின் மீது மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கூட்டத்துக்குள் காரை மோதவிட்டு அதில் இருந்து இறங்கி மர்ம நபர், மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சம்பவ நடந்த இடத்தில் நேரில் பார்த்த நபர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாக அந்நாட்டு செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள கால்வாய் மற்றும் போர்பன் தெரு சந்திப்பல், மக்கள் புத்தாண்டைக் கொண்டாடிய இடத்தில் இந்தச் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. திடீரென அதிவேகமாக வந்த கார் ஒன்றுகொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது மோதியதால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாகியது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
BREAKING: Multiple people dead after a car plowed into a group of people on Bourbon Street in New Orleans pic.twitter.com/m37plAgeNv
— Insider Paper (@TheInsiderPaper) January 1, 2025