அட்டைப்பெட்டிக்குள் ஒளிந்து விடையாடிய சிறுமி!சிறுமியின் மீது கார் மோதிய சம்பவம்!
சீனாவில் உள்ள ஸெஜியாங் மாகாணத்தில் சுசவ் என்ற சாலையில் சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தன.அப்போது 5 வயது சிறுமி ஒருவர் அட்டைப்பெட்டியில் ஒளிந்து விளையாடும்போது கார் ஒன்று அட்டைப்பெட்டியோடு சிறுமி மீது ஏறியது.
இதனை பார்த்த சிறுமியின் தந்தை ஓடிவந்து காரை நிறுத்தி மருத்துவமனையில் சேர்த்தார்.இதில் சிறுமிக்கு நெஞ்சு எலும்பில்முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோட்டில் என்ன கிடக்கிறது? என்று கவனிக்காமல் காரை ஏற்றிய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கு பலர் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.பெற்றோரும் குழந்தைகளை சாலையில் விளையாட விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.