இனி சொத்து வாங்க முடியாது! – தடை விதித்த கனடா அரசு!
கனடாவில் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் வீடு வாங்க 2 ஆண்டுகளுக்கு தடை விதிப்பு.
வீடுகளின் சொத்து மதிப்பு உயர்ந்ததால் கனடாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த தடை பொருந்தாது. வெளிநாட்டவர்கள் குடியிருப்பு சொத்துக்களை முதலீடுகளாக வாங்குவதை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யும் புதிய கனடா சட்டம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து கனடிய வீட்டு விலைகள் அதிகரித்ததால் கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.