‘பஜனை நிகழ்ச்சியை ரத்து செய் அல்லது…’ ஆஸ்திரேலியாவில் இந்து கோவிலுக்கு அச்சுறுத்தல்..!
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவிலுக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு மத நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் அல்லது பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. மெல்போர்னின் வடக்கு புறநகர்ப் பகுதியான கிரேகிபர்னில் உள்ள காளி மாதா மந்திர் நிர்வாகம் மத நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டிருந்த போது பாதிரியாருக்கு பஞ்சாபி மொழியில் பேசும் ஒருவரிடமிருந்து மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
இது குறித்து காவல் துறையினரிடம் கூறிய பாதிரியார் பாவனா, தொலைபேசி எண் காட்டாத நபரிடம் இருந்து ‘நோ காலர் ஐடி’ தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார். அதில் பேசிய நபர் பஞ்சாபி மொழியில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பஜனை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறும், அதில் பாடகர் ஒரு தீவிர இந்து என்று உங்களுக்குத் தெரியும். அவர் வந்தால் கோவிலில் பிரச்சனை ஏற்படும் என்று மிரட்டியதாக கூறினார்.
இதையடுத்து பாதிரியார் மத நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது என்று தன்னை மிரட்டியவரிடம் கூறியுள்ளார். இந்த மிரட்டல் அழைப்பு குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளிலும் காலிஸ்தானி இயக்கத்தை ஆதரிப்பவர்களால் இந்து கோவில்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.