புதன் கிரகத்தில் கொட்டிக் கிடக்கும் வைரம் – பூமிக்கு கொண்டு வர முடியுமா?
வைரம் : பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிகளவில் இருக்க வாய்ப்பு உள்ளதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
நீங்கள் ஒரு வைரத்தைக் கண்டால், எவ்வாறு உணருவீர்கள். சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு வைரங்கள் மட்டுமே சிதறிக் கிடந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? புதனின் மேற்பரப்பில் ஏராளமான வைரங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் ஜர்னலில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது. அட ஆமாங்க.. புதன் கிரகத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பதாகவும், இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் 9 மைல் (14 கி.மீ) தடிமனில் இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால், வைரத்தை சுலபமாக வெட்டி எடுக்க சாத்தியம் இல்லை என்று ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற அறிவியல் இதழில் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வைரங்களை பூமிக்கு கொண்டு வர முடியாது. ஆனால் அவற்றைப் படிப்பதன் மூலம் புதன் கிரகத்தின் உருவாக்கம் மற்றும் அதன் காந்தப்புலம் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
அந்த அளவுக்கு புதன் கிரகம் தனக்குள் பல ரகசியங்களை மறைத்து வைத்துள்ளது. அதில், மிகப்பெரிய மர்மம் அதன் காந்தப்புலம் தான். பூமியுடன் ஒப்பிடும்போது இந்த கிரகத்தின் காந்தப்புலம் மிகவும் பலவீனமானது. ஏனெனில் இந்த கிரகம் மிகவும் சிறியது. இதன் மேற்பரப்பு பல இடங்களில் கருமை நிறத்தில் இருக்கும். நாசாவின் மெசஞ்சர் பணியானது மேற்பரப்பில் இருக்கும் கருமையான நிறங்களை கிராஃபைட் என அடையாளம் கண்டுள்ளது.