2023 மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் 20 மில்லியன் மக்கள் பட்டினி… வெளியான தகவல்!

Default Image

2023 மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள் என தகவல்.

2023-ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் சுமார் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதால், வரும் ஆண்டிற்கான அந்நாட்டின் பொருளாதார மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 4 மில்லியன் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவிப்பார்கள் என்றும் அங்கு ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொருளாதாரம் சரிவால், கடன் அதிகரிப்பு, வேலையின்மையை ஏற்படுத்தியுள்ளது. பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு காரணமாக, மக்கள் இப்போது தங்கள் வருமானத்தில் 71% உணவுக்காக செலவிடுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் வசிப்பவர்கள் தங்கள் மோசமான நிலைமை குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சி கவிழ்ந்து தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் நிலைமை மோசமடைந்துள்ளது.

குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்கள் தடையின்றி தொடர்கின்றன. இதன் விளைவாக, ஆப்கானிஸ்தானில் பெண்களும் சிறுமிகளும் மனித உரிமைகள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பாகுபாடு இல்லாத அடிப்படை உரிமைகள், கல்வி, வேலை, பொது பங்களிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை இழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்