20 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய புத்தர் கோவில்! கோவிலை காண குவியும் மக்கள் கூட்டம்!
தாய்லாந்து நாட்டில், லோப்புரி மாகாணத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பதாக நீரில் மூழ்கிய புத்தர்கோவில் தற்போது வறட்சியின் காரணமாக வெளியே தெரிகிறது. இதனையடுத்து, இந்த கோவிலை காண ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தலையில்லாமல் இருக்கும் சிலைக்கு கீழ், மக்கள் மலர்களால் அலங்கரித்து, ஊதுபத்திகள் ஏற்றி வைத்தும் புத்தரை மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத வறட்சியால், 3 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது.