நில அபகரிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள தமிழர்கள் மீது கொடூர தாக்குதல்!
இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்றான மட்டக்களப்பில் மேய்ச்சல் நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து மீட்டு தருமாறு, பண்ணையாளர்கள் சிங்கள தமிழர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு கொம்மாதுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மட்டக்களப்பு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், தடுப்புகளை மீறி போராட முயன்ற தமிழர்கள் மீது காவல்துறையினர் நடத்தியுள்ளனர். மேய்ச்சல் நில பிரச்னைக்கு தீர்வு கோரி இந்த போராட்டத்திற்கு முக்கிய நிர்வாகியான அமலநாயகி உள்ளிட்டோர் மீது கொடூர தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது.
மட்டக்களப்பில் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக, மயிலத்தமடு மாதவனை போராட்டக்காரரோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தலைவி மீது ஆண் பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல். #Batticaloa #WWTnews #WorldwideTamils pic.twitter.com/UOvxEXaG3d
— Worldwide Tamils (@senior_tamilan) October 8, 2023
தற்போது, போராடத்தின் போது, மட்டக்களப்பு காவல்துறையினருக்கும் தமிழர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுல்லு வீடியோ ணையத்தில் வைரலாகி வருகிறது.