Rishi Sunak lands in Tel Aviv [File Image]
இஸ்ரேல்-பாலத்தீன போர் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றார்.
அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் இஸ்ரேல் செல்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தற்போது இஸ்ரேலின் டெல் அவிவிலுக்கு வந்தடைந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, போரில் இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை வழங்குவது குறித்து ரிஷி சுனக் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும், காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும்.
ஆனால், அதனை ஆக்கிரமிக்கக்கூடாது என்றும், ஹமாஸ் அமைப்பிற்கு பாலஸ்தீனியர்கள் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. ஹமாஸ் அமைப்பு, அல்கொய்தா அமைப்பை விட பயங்கரமானது என்றும் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, காஸாவில் மருத்துவமனை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றார். அங்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
காசா மருத்துவமனை தாக்குதல் – ஆதாரங்களை வெளியிட்டது இஸ்ரேல்!
இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த முக்கியமான நேரத்தில் இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து தரும். இஸ்ரேலுக்கு முழுமையாக அமெரிக்கா துணை நிற்கும் என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் கடந்த 7ம் தேதி தொடங்கி இன்று 13வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும்.! ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு.!
இந்த சூழலில், காசாவில் உள்ள அல் – அஹ்லி அரபு மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த தாக்குதல் போர்குற்றம், இனப்படுகொலை என ஐக்கிய நாடு சபை உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டங்களை தெரிவித்தனர்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…