இஸ்ரேல் பிரதமரை சந்தித்து பேசினார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

Benjamin Netanyahu - Rishi Sunak

இஸ்ரேல்-பாலத்தீன போர் தொடர்ந்து 13வது நாளாக நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இஸ்ரேலுக்கு வந்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.

இப்பொது, டெல் அவிவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை நடத்தினார். பின்னர், சர்வதேச சட்டத்திற்கு இணங்க தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேல் நாட்டிற்கு முழு ஆதரவு அளிக்கிறது என்று இஸ்ரேல் சென்றடைந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

இவ்வளவு பயங்கரமான சூழ்நிலையில் இங்கு இருப்பதற்கு நான் வருந்துகிறேன். மனிதாபிமான உதவிக்காக காஸாவுக்குள் நுழைய முடிவு  செய்ததை நான் வரவேற்கிறேன் என்றார். முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தண்ணீர், உணவு மற்றும் பிற பொருட்களை அனுமதிக்க ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இங்கிலாந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், காஸாவில் மருத்துவமனை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றார். அங்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.

காசா மருத்துவமனை தாக்குதல் – ஆதாரங்களை வெளியிட்டது இஸ்ரேல்!

இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த முக்கியமான நேரத்தில் இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து தரும். இஸ்ரேலுக்கு முழுமையாக அமெரிக்கா துணை நிற்கும் என திட்டவட்டமாக தெரிவித்து ஆயுதங்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்துக்கொண்டார்.

இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும்.! ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு.!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் கடந்த 7ம் தேதி தொடங்கி இன்று 13வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Modi - Pakistan PM
Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son