Rishi Sunak : டெல்லி கோவிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.!

UK President Rishi Sunak

இந்தவருடம் இந்தியா தலைமையில் நடைபெறும் 18வது ஜி20 உச்சி மாநாடானது தலைநகர் டெல்லியில் நேற்று  முதல் துவங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. நேற்று துவங்கிய இந்த மாநாடு இன்று இன்றும் தொடர்ந்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஜி20 நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஒரேபூமி என்ற தலைப்பிலும், ஒரே குடும்பம் என்ற தலைப்பில் 2 கட்டமாக ஆலோசனை நடைபெறுகிறது.

இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று ஜி20 ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட ரிஷி சுனக், இன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக தலைவர்கள் உடன் மரியாதை செலுத்தினார்

அதன் பிறகு டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் தரிசனம் செய்தனர். அப்போது அங்கு அவர்கள் அங்குள்ள மத போதகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் இரண்டாவது நாள் கூட்டத்தில் ரிஷி சுனக் கலந்துகொள்ள உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்