பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் நாளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் முதல்முறையாக இந்தியா வருகிறார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், ஏற்கனவே இரண்டு முறை இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்தார். பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் முதல்முறையாக இந்தியா வருகிறார். நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ள இவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை இந்தியா வரும் அவர், வரும் 22ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்தியா- பிரிட்டன் இடையே வர்த்தக ரீதியான ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…