உக்ரைனுக்கு 1000 மெட்டல் டிடெக்டர்களை வழங்கும் பிரிட்டன்..!
உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அகற்ற 1000 மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் செயலிழக்கச் செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரானது ஒரு முடிவில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏவுகணை தாக்குதல்கள் மூலம் பாதிப்படைந்த தங்களது சாலைகள் மற்றும் கட்டமைப்புகளை சீரமைக்கும் முயற்சியில் உக்ரைன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதற்காக 1000க்கும் மேற்பட்ட மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் கண்ணி வெடிகளை செயளிக்கச்செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது.கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் முயற்சிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதற்காக இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
“ரஷ்யா கண்ணிவெடிகளைப் பயன்படுத்துவதும், வலிமையுடன் தொடர்ச்சியாக போரை மேற்கொள்வதும் புதினின் அதிர்ச்சியூட்டும் செயலாக உள்ளது” என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் கூறியுள்ளார். மேலும் 2023ஆம் வருடம் 2.77 பில்லியன் டாலர்களை உக்ரைனின் ராணுவ உதவிகளுக்காக வழங்கவுள்ளது என்றும் கூறியுள்ளார்.