Categories: உலகம்

காசா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் தாக்குதல்… 500 பேர் உயிரிழப்பு..!

Published by
murugan

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் கடந்த 12 நாட்களாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், காசாவில் உள்ள அல் அரபு மருத்துவமனை மீது நடத்திய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில்  500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு  500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர். தாக்குதலில் நடத்தப்பட்ட மருத்துவமனை குழந்தைகள் நிறைந்த  மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு கனடா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ மதபோதகர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹமாஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவமனை மீதான தாக்குதல் போர்குற்றம், இனப்படுகொலை, இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.

Published by
murugan

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

40 minutes ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

2 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

3 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

4 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

4 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

5 hours ago