#BREAKING : துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம்..! 5,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை..!
துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் நேற்று மற்றும் இன்று 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல் சிரியாவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், துருக்கியில் தற்போது 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தால் பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த இடிபாடுகளை சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்பு குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், துருக்கியில், 3500 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிரியாவில் 1500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.