எக்ஸ்’ தளத்தின் தடையை நீக்கியது பிரேசில்! மகிழ்ச்சியில் எலான் மஸ்க்!

5.1 மில்லியன் டாலர் அபாரம் செலுத்திய பிறகு பிரேசில் நாடு சமூக தளமான 'எக்ஸ்' மேல் விதித்த தடையை நீக்கி இருக்கிறது.

Brasil removed Ban For X

பிரேசில் : கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், வெற்றி பெற்ற லுலா டா சில்வா ஜனாதிபதியாக வெற்றிபெறுவதை தடுக்க எதிர்த்து போட்டியிட்ட போல்சனாரோ, சதிச்செயலில் ஈடுபட்டாரா? என பிரேசில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

அதே வேளை,ஏற்கனவே மூடப்பட்டிருந்த பல்வேறு போலியான எக்ஸ் கணுக்குகளை எலான் மஸ்க் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டார் எனும் குற்றச்சாட்டை பிரேசிலின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான அலெக்சாண்டிரே டிமொரேஸ் தெரிவித்தார்.

இப்படி இருக்கையில், பிரேசிலில் பேச்சு சுதந்திரம் முடக்கப்படுவதாக எலான் மஸ்க் அந்த குற்றச்சாட்டை விமர்சித்து பேசினார். மேலும், பிரேசிலில் உள்ள ‘எக்ஸ்’ அலுவலகங்களை மொத்தமாக மூடி இருந்தார். இருப்பினும், ‘எக்ஸ்’ சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் அதில் எந்த பாதிப்பும் இருக்காது என அப்போது தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், பிரேசில் நாட்டில் ‘எக்ஸ்’ தளத்தில் இப்படி முடக்கிய கணக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததற்காக சட்ட விவகார அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். அதுவும், அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் எனவும், தவறினால் பிரேசில் நாட்டில் ‘எக்ஸ்’ தளம் முடக்கப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், எலான் மாஸ்க் அந்த உத்தரவை ஏற்க முடியாது என திட்டவட்டமாக அப்போது கூறியிருந்தார். இதனால், பிரேசில் நாட்டில் ‘எக்ஸ்’ தளத்திற்கு தற்காலிக தடை விதித்து பிரேசில் உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அத்துடன், பிரேசில் நாட்டில் உள்ள மக்கள் (VPN) மூலம் ‘எக்ஸ்’ செயலியை பயன்படுத்தினால் 8,874 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இதனால், பிரேசிலில் இருந்து பிற நாடுகளுக்கு தேவையான தகவல் பரிமாற்றம் என்பது கடுமையாக ஸ்தம்பித்து காணப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு எக்ஸ் தளம் மீதான தடையை நீக்கி இருக்கிறது பிரேசில் அரசு.

பிரேசில் விதித்த அந்த நிபந்தனையை ஒப்புக்கொண்டு எக்ஸ் நிறுவனம் 5.1 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.42கோடி ரூபாய் அபராதம் செலுத்திய பிறகு அதன் மீதுள்ள தடையை நீக்கி இருக்கிறது பிரேசில் நீதிமன்றம். இதனால், ‘எக்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்