பிரேசிலில் கடும் மழை வெள்ளம்..! 8 பேர் பலி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மண்ணுக்குள் புதைந்த சோகம்
பிரேசில் நாட்டின் Rio de Janeiro (state) மாகாணத்தில் கடுமையான மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் தேதி முதல் மாகாணத்தின் தெற்கு பகுதியில் கனமழை பெய்கிறது. அதன்படி 42.8 மில்லி மீட்டர் அளவுக்கு கன மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Rio de Janeiro (state) மாகாணத்தின் ஒரு பகுதியான Banguவில் 43.2 மில்லி மீட்டர் என்ற அளவில் மழையானது பதிவாகியுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் சிக்கி 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். அங்குள்ள தெருக்களில் மழை வெள்ளம் ஆறு போல ஓடும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.
நவல்னியின் மனைவி, மகளை சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பரவலான பொருட்சேதங்களை ஏற்படுத்தியுள்ளதோடு நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளது. Barra do Piraí, Nova Iguaçu, Japeri மற்றும் Mendes ஆகிய இடங்களில் வசிக்கும் சுமார் 600 பேர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும், வரும் நாட்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் தொடரும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.