பிரேசில் நாட்டில் இரண்டு பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் மூவர் பலி, 13 பேர் காயம் என தகவல்.
தென்கிழக்கு பிரேசில் நாட்டில் உள்ள எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில், தலைநகர் விடோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே அராகுரூஸ் என்ற சிறிய நகரில் குண்டு துளைக்காத ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த ஒருவர் இரண்டு பள்ளிகளில் திடீரென புகுந்து துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார்.
அராக்ரூஸில் ஒரே தெருவில் அமைந்துள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களைக் கொண்ட ஒரு பொதுப் பள்ளி மற்றும் ஒரு தனியார் பள்ளி ஆகியவற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று மாநில பொது பாதுகாப்பு செயலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 13 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
இதில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவன் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபருக்கு 16 வயது இருக்க கூடும், அவர் முன்னாள் மாணவர் எனவும் சந்தேகிக்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், பொதுப் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக எஸ்பிரிட்டோ சாண்டோ கவர்னர் ரெனாடோ காசாகிராண்டே கூறினார்.
ஆனால், சந்தேக நபரின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த தாக்குதலை மாகாண கவர்னர் ரெனேட்டோ காசாகிராண்ட் உறுதிப்படுத்தி உள்ளார். அராகுரூசில் உள்ள 2 பள்ளி கூடங்களில் கோழைத்தன தாக்குதல் நடந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் நினைவாக 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி, விரைவில் புதிய விவரங்கள் வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்த இரட்டை தாக்குதலுக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரேசிலில் பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அசாதாரணமானது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஓரளவு அதிக அதிர்வெண்ணுடன் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…