26 முறை ரத்தத்தை தானமாக கொடுத்து 104 நாய்களின் உயிரை காப்பாற்றிய இங்கிலாந்து நாய் !
இங்கிலாந்து நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் அதிகமாக பேசப்பட்டு வருவது பிராம்பிள் என்ற நாயை பற்றித்தான். இந்த நாய் இதுவரை இங்கிலாந்து அதிக முறை ரத்தத்தை தானமாக செய்த நாய் என்ற பெருமையை பிராம்பிள் நாய் பெற்று உள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை ரத்தத்தை தானமாக கொடுத்ததால் 104 நாய்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை ரத்ததானம் செய்யும்போது 450 மில்லி கிராம் ரத்தம் கொடுத்து வருகிறது.
இந்த நாயின் உரிமையாளர் மரியா க்ரட்டாக் பிராம்பிள் குறித்த பெருமை கொள்வதாக கூறினார். ஒரு நாய் பிறந்து ஒரு ஆண்டுக்குப் பிறகுதான் ரத்தம் வழங்க முடியும்.பிராம்பிள் பிறந்த ஓராண்டுக்குப் பிறகுதான் ரத்த தானம் கொடுக்க ஆரம்பித்தது.
ரத்த தானம் கொடுத்த பிறகு பிராம்பிள் சிறப்பான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் நாய் வளர்ப்பவர்கள் ரத்த தானம் அளிக்க விரும்புவதில்லை அதனால் தான் இங்கிலாந்தில் மரியாவும், பிராம்பிள் பாராட்டுக்குரியவர்கள் ஆக விளங்குகின்றன.
மேலும் பிராம்பிள் இந்த ரத்த சேவையை கவுரவிக்கும் விதமாக ரத்த வங்கி பிராம்பிள் கழுத்தில் “நான் உயிரிலே காப்பாற்றக் கூடியவன் என எழுதப்பட்ட சிவப்புத் துணி கட்டி வைக்கப்பட்டுள்ளது.