தனது காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்.. வைரல் வீடியோ..!
பிரேசிலின் தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியில் உள்ள ஜடாயில் தனது 27 வயது காதலனால் 23 வயது பெண் சுட்டுக் கொல்லப்படும்போது அதை வீடீயோவாக உயிரிழந்த பெண் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் காதலர்கள் இருவரும் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அதில் காதலன் ஒரு தங்க நிற துப்பாக்கியை எடுத்து தனது காதயை நோக்கி காட்டுகிறார்.
உடனே அந்த காதலி சிரித்துக்கொண்டே இருக்கிறார். அப்போது திடீரென கையில் வைத்திருந்த துப்பாக்கியை அழுத்தி காதலியை சுட்டார். திடீரென சீறிப்பாய்ந்து குண்டுகாதலின் உடலில் பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அனைத்தும் உயிரிழந்த காதலி வீடியோ பதிவு செய்திருந்தார். அவர் உயிரிழந்ததும் சிறிது நேரத்திலேயே வீடியோ முடிகிறது.
சம்பவத்தின் பின்னர் காதலன் பொலிசாருக்கு போன் செய்து தான் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
SHOCKING: A 23-year-old woman recorded the moment she was killed after being shot by her 27-year-old boyfriend in Jataí, in the southwestern region of Goiás, Brazil. pic.twitter.com/LoA9PXgyqt
— Insider Corner (@insiderscorner) November 6, 2023