பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. இதற்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
ஆனால் இழுபறி நீடித்து வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரசாமே தெரிவித்தார். இந்த நிலையில் தெரசா மே ராஜினாமா செய்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.