மீண்டும் பதற்றம்… உக்ரைன் தலைநகர் மீது குண்டுவீச்சு.! 2 பேர் பலி.!

Ukraine head Kiwi

இன்று (புதன்கிழமை) காலை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது வான்வழியாக குண்டுகள் வீசப்பட்டன. இந்த குண்டுவீசப்பட்ட சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

உயிரிழந்தோரின் உடல்கள் கட்டிட இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அந்த குண்டுவீச்சு சம்பவத்தில் கண்ணாடிகள் சிதறி ஒருவர் காயமடைந்ததாகவும் மேயர் கிளிட்ச்கோ கூறினார். மேலும், இந்த குண்டுவீச்சில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வான்வெளி தாக்குதல் ஆளில்லா விமானங்களிலிருந்து வந்ததா வேறு வகைகளில் வீசப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கிளிட்ச்கோ கூறினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்த போர் தாக்குதல் சற்று குறைந்த இந்த நேரத்தில், நடத்த இந்த வான்வெளி தாக்குதல் உக்ரைனில் மேலும் போர் பதற்றத்தை உண்டாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்