மாஸ்கோ-கோவா சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! அவசரஅவசரமாக தரையிறக்கம்..!

Default Image

மாஸ்கோவில் இருந்து 244 பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவசர அவசரமாக தரையிறக்கம். 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 244 பயணிகளுடன் விமானம் ஒன்று நேற்று இரவு 10 மணியளவில் கோவா நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில், விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்த போது, குஜராத் விமான கட்டுப்பாட்டு அறைக்கு ஈமெயில் மூலமாக வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்ட விமானிக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து குஜராத்தில் உள்ள இந்திய விமானப் படைத்தளத்தில் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து பயணிகள் 2444 பேரும் தரையிறக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் தேசிய பாதுகாப்பு படை யினர் விமானம் தரையிறக்கப்பட்ட விமானப்படை தளத்துக்கு விரைந்த நிலையில்,  இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்