#Bomb cyclone: கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு!
கலிபோர்னியாவில் பாம் புயல் எதிரொலியால் அவசர நிலையை அறிவித்தார் கவர்னர்.
கலிபோர்னியா மிகப்பெரிய வானிலை நிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்த ஒரு நாளுக்குப் பிறகு, நேற்று பாம் புயல் மேற்கு அமெரிக்க மாநிலத்தை தாக்கியது. இந்த பாம் புயல் அப்பகுதியை மூழ்கடிக்கும் பெருமழையைக் கொண்டுவந்தது, ஏற்கனவே, புத்தாண்டு தினத்தன்று தொடர்ச்சியான புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது.
சக்திவாய்ந்த காற்று மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது. புயல் அதன் உச்சத்தை எட்டுவதால் நேற்று இரவு முதல் இன்று காலை எந்த விதமான அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு மாநில அதிகாரிகள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும் புயலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், கலிபோர்னியாவை தாக்கிய ‘பாம் புயல்’ எமர்ஜென்சி அறிவிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அங்கு நிலைமையின் தீவிரத்தை அணுகி, கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காகவும், மீட்பு முயற்சிகளுக்காகவும் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். அதன்படி, முழு நடவடிக்கையையும் கண்காணிக்க சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு அவசரகால நடவடிக்கை மையம் நிறுவப்பட்டுள்ளது.