நடுவானில் தீப்பிடித்து விபத்துக்குள்ளான போயிங் சரக்கு விமானம்.!
அட்லஸ் ஏர் போயிங் 747-8 சரக்கு விமானம் நடுவானில் தீப்பிடித்ததால் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் நான்கு ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஎன்எக்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது.
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக இடது இறக்கையில் இருந்து தீப்பிடித்து எறிந்துள்ளது.
இந்த நிலையில், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்பொழுது, இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய ஆய்வு நடத்தப்படும் என்று அந்த விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
தேர்தல் பணி… மேற்கு மண்டல பிரதிநிதியாக களமிறங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
பின்னர், விமானம் தரையிறங்கியதும் தீயை அணைக்க தீயணைப்பு அதிகாரிகள் தயாராக இருந்தனர். தீயை சரியான நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வந்தனர், மேலும் இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது, இந்த விமானம் நடு வானில் தீ பிடித்து எரியும் வெடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
BREAKING REPORT : ⚠️ Atlas Air Boeing 747-8 from Miami International Airport CATCHES FIRE MID AIR..
DEVELOPING.. pic.twitter.com/Qk6QLZ6U7E
— Chuck Callesto (@ChuckCallesto) January 19, 2024